பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: அதிக மதிப்பெண்கள் பெற்ற மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்குப் பரிசு
By DIN | Published On : 01st May 2019 08:20 AM | Last Updated : 01st May 2019 08:20 AM | அ+அ அ- |

பத்தாம் வகுப்பு பொதுத் தெர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற திருச்சி மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளை ஆணையர் ந.ரவிச்சந்திரன் பாராட்டி பரிசுகளை வழங்கினார்.
திருச்சி மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள செந்தண்ணீர்புரம் உயர்நிலைப் பள்ளி, எடமலைப்பட்டிபுதூர், திருவானைக்கா, விமான நிலைய காமராஜர் நகர், கே.கே.நகர் பள்ளிகள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் நூறு சதவிகிதத் தேர்ச்சியைப் பெற்றுள்ளன.
இதில் அதிக மதிப்பெண்கள் பெற்ற செந்தண்ணீர்புரம் உயர்நிலைப் பள்ளி மாணவி ஜா. கீர்த்தனா, எடமலைப்பட்டிபுதூர் உயர்நிலைப்பள்ளி மாணவி சௌ. காயத்ரி, திருவானைக்கா உயர்நிலைப்பள்ளி மாணவி ஹரினி, காமராஜ் நகர் உயர்நிலைப்பள்ளி மாணவி வி. விஜயதர்ஷினி, கே. கே. நகர் உயர்நிலைப்பள்ளி மாணவர் டி. சுந்தரமூர்த்தி, கீழரண்சாலை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவர் மு. சிவதாசன், அய்யனார் உயர்நிலைப்பள்ளி மாணவி மு. காவ்யா, மேலக்கல்கண்டார் கோட்டை உயர்நிலைப்பள்ளி மாணவி எஸ். ஷாகுபர் நிஷாஆகியோரை, மாநகராட்சி ஆணையர் ந.ரவிச்சந்திரன் செவ்வாய்க்கிழமை பாராட்டி பரிசுகளை வழங்கினார்.
இந்த நிகழ்வில் மாநகராட்சி உதவி ஆணையர்கள் திருஞானம், துரைமுருகன், குணசேகரன் மற்றும் பள்ளித் தலைமையாசிரியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.