போகர் மகரிஷிக்கு பரணி நட்சத்திர சிறப்பு வழிபாடு
By DIN | Published On : 06th May 2019 03:20 AM | Last Updated : 06th May 2019 03:20 AM | அ+அ அ- |

முசிறி அருகிலுள்ள திருஈங்கோய்மலை மரகதாசலேசுவரர் கோயில் மலையடிவாரத்தில், போகர் மகிரிஷக்கு பரணி நட்சத்திர சிறப்பு வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
போகர் மகரிஷிக்கு இளநீர், வாசனைத் திரவியங்கள் உள்ளிட்ட பல்வேறு வகை பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
இதைத் தொடர்ந்து, மலைமேல் உள்ள அருள்மிகது பாலதண்டாயுதபாணிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார, தீபாராதனை நடைபெற்றது. இந்த நிகழ்வுகளில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
தொடர்ந்து மானாமதுரை ஆன்மிகக் குழுவினர் ஏற்பாட்டில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.