முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி
தொட்டியம் அருகே சுமை ஆட்டோ கவிழ்ந்து 26 பேர் காயம்
By DIN | Published On : 15th May 2019 08:25 AM | Last Updated : 15th May 2019 08:25 AM | அ+அ அ- |

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே செவ்வாய்க்கிழமை மாலை சுமை ஆட்டோ கவிழ்ந்ததில் 26 பேர் காயமடைந்தனர்.
தொட்டியம் ஒன்றியம், தோளூர்ப்பட்டி ஊராட்சியிலுள்ள முதலிப்பட்டி கிராமத்தில் தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ், பணிகள் நடைபெற்று வருகின்றன.
பாலசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டவர்கள் முதலிப்பட்டியில் செவ்வாய்க்கிழமை வேலை செய்துவிட்டு, மாலையில் சுமை ஆட்டோ மூலம் தங்கள் ஊருக்குச் சென்று கொண்டிருந்தனர்.
திருச்சி- நாமக்கல் சாலையில் தனியார் கல்லூரி அருகே வந்த போது, சுமை ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இதில் ஆட்டோவில் பயணித்த பாலசமுத்திரம் விசிலியா (39), விஜயா (55), வளர்மதி (47), பாப்பாத்தியம்மாள் (60), சுதா (32), விஜயலட்சுமி (53), விஜயா (39), பழனியம்மாள் (55), பிச்சையம்மாள் (62), பெரியக்காள் (37),
லட்சுமி (31), சாந்தி (38), புவனேசுவரி (32), கௌரி (42), சசிகலா (40), மருதாயி (55), ராதா (30), மோகனா (44), பெருமாள் (60), மல்லிகா (50) , பத்மாவதி (65), சாவித்திரி (55), தமிழ்ச்செல்வி (50), சம்பூர்ணம் (35), கௌரி (32), பரமேசுவரி (35) ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.
இவர்கள் தொட்டியம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். சிலர் மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
விபத்துக்கு காரணமான பாலசமுத்திரத்தைச் சேர்ந்த சுமை ஆட்டோ ஓட்டுநர் மோகன்ராஜ் (32) மீது, தொட்டியம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.