சுடச்சுட

    

    உறையூர் பஞ்சவர்ணேசுவரசுவாமி கோயிலில் திருக்கல்யாண வைபவம்

    By DIN  |   Published on : 16th May 2019 08:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உறையூர் அருள்மிகு காந்திமதி அம்மன் உடனுறை பஞ்சவர்ணேசுவர சுவாமி திருக்கோயில் வைகாசித் திருவிழாவில், திருக்கல்யாண வைபவம் புதன்கிழமை நடைபெற்றது.
    பல்வேறு சிறப்புகளைக் கொண்ட இக்கோயிலின் வைகாசி விசாகத் திருவிழா கடந்த 9 ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து சுவாமி, அம்மன் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தனர்.
    ஏழாம் திருநாளான  புதன்கிழமை மாலை கோயில் வளாகத்தில் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. முன்னதாக மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலமும்,அதைத் தொடர்ந்து மாலை மாற்றுதல் வைபவமும் நடந்தது. திருக்கல்யாண விழாவில் ஏராளமான சிவனடியார்கள்,பக்தர்கள் பங்கேற்றனர். திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வெள்ளிக்கிழமை ( மே 17) நடைபெறுகிறது.  சனிக்கிழமை ( மே 18) தீர்த்தவாரி மற்றும் சுவாமி, அம்மன் ரிஷப வாகனத்தில் காட்சியளித்தலும், மே 20 ஆம் தேதி பிச்சாடனார்  வீதியுலாவும் நடைபெறுகிறது. திருவிழா ஏற்பாடுகளை   கோயில் செயல் எஸ்.அருண்பாண்டியன் மற்றும் விழாக்குழுவினர் செய்துவருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai