சுடச்சுட

  

  பராமரிப்புப் பணிகள் முடிவு: ரயில்கள்  வழக்கம் போல இயங்கும்

  By DIN  |   Published on : 16th May 2019 08:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பராமரிப்பு பணிகளால்  மாற்றம் செய்யப்பட்டிருந்த  5 ரயில்களின் சேவை,  வியாழக்கிழமை ( மே 16) முதல் வழக்கம் போல இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
  இதுகுறித்து தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மேலாளர் அலுவலகச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பது: மே 9 ஆம் தேதி முதல் திருச்சி வழியாக இயக்கப்படும் சில ரயில்களின் சேவையில்   தாற்காலிக மாற்றம் செய்யப்பட்டிருந்தது. லைன்பிளாக் மற்றும் பராமரிப்புப் பணிகளால் சில ரயில்கள் முழுமையாகவும், பகுதியாகவும் ரத்து செய்யப்பட்டதுடன், சில ரயில்கள் வேறு நேரத்தில் இயக்கப்பட்டன.  
  இந்நிலையில் பழுதுகள் சரிசெய்யப்பட்டு, பராமரிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளன. இதனையடுத்து மாற்றம் செய்யப்பட்டிருந்த ரயில்களான, காரைக்கால்-திருச்சி-காரைக்கால் பயணிகள் ரயில்கள் (வண்டிஎண் 76851-76854),  திருச்சி-சென்னை விரைவு ரயில் (எண் 16796),  கோவை - மயிலாடுதுறை ஜனஜதாப்தி விரைவு ரயில் ( எண் 12084), திருச்சி - மயிலாடுதுறை விரைவு ரயில் (எண் 16234) ஆகிய ரயில்கள்வியாழக்கிழமை முதல்  மீண்டும் அட்டவணைப்படி இயக்கப்படும். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai