இந்தியன் வங்கி முசிறி கிளையின் புதிய கட்டடம் திறப்பு
By DIN | Published On : 16th May 2019 08:49 AM | Last Updated : 16th May 2019 08:49 AM | அ+அ அ- |

திருச்சி மாவட்டம், முசிறியில் இந்தியன் வங்கி கிளையின் புதிய கட்டடம் புதன்கிழமை திறக்கப்பட்டது.
முசிறியில் அமலா பெண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரில், குளிர்சாதன வசதியுடன் கட்டப்பட்ட இந்த கிளையின்புதிய கட்டடத்தை வங்கியின் திருச்சி மண்டல மேலாளர் சாமிநாதன் திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார்.
இக்கிளையோடு இணைந்த ஏ.டி.எம். பி.என்.ஏ. போன்ற வசதிகள் கொண்ட இ- பிரிவை துணை மண்டல மேலாளர் ந.ராஜாமணி திறந்து வைத்தார்.
இதைத் தொடர்ந்து வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்கும் நிகழ்வைத் தொடக்கி வைத்து, மண்டல மேலாளர் பேசும் போது, இந்தியன் வங்கி வாடிக்கையாளர் சேவைக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. வாடிக்கையாளர் சேவையில் முதலிடத்தில் இருப்பதோடு, அனைத்து விதங்களிலும் சிறப்பாக செயல்படுவதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து முசிறி, குளித்தலை, வளையெடுப்பு, மேய்க்கல்நாயக்கன்பட்டி இந்தியன் வங்கி வாடிக்கையாளர்களுக்கு மண்டல மேலாளர் கடன் ஒப்புதல் கடிதங்களை வழங்கினார். இதில் 154 பயனாளிகளுக்கு சுமார் ரூ. 3 கோடி கடன்கள் வழங்கப்பட்டன.