சுடச்சுட

    

    திருச்சி மாவட்டம், மணப்பாறை நகரில் உள்ள அருள்மிகு மாதுளாம்பிகை உடனுறை நாகநாதசுவாமி கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மழை வேண்டி யாக வேள்வி  வியாழக்கிழமை நடைபெற்றது. 
    ச. முத்துக்கண்ணன் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் பூஜைகளை நடத்தினர்.  தொடர்ந்து கும்ப புனித நீரால் மூலவர் சிவபெருமானுக்கும், மாதுளாம்பிகை தாயாருக்கும் அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், இறையன்பர்கள் பங்கேற்றனர். 
    ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் வே.பிரபாகர், அருட்செல்வர் அருணகிரிநாதர் அறக்கட்டளை நிர்வாகிகள், ஆலய நிர்வாகிகள், சிவச்சாரியர்கள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள்  செய்தனர்.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai