Enable Javscript for better performance
வேளாண் இடுபொருள்  பட்டயப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்- Dinamani

சுடச்சுட

    

    வேளாண் இடுபொருள்  பட்டயப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

    By DIN  |   Published on : 17th May 2019 09:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வேளாண் இடுபொருள் விற்பனையாளர் சான்றிதழ் பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் பி.மாசிலாமணி தெரிவித்துள்ளார்.
    இதுகுறித்து புதன்கிழமை அவர் வெளியிட்ட  செய்திக்குறிப்பு: தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக திறந்தவெளி  மற்றும் தொலைநிலைக் கல்வி இயக்ககத்தின் வழியாக, இடுபொருள் விற்பனையாளர் சான்றிதழ்  பட்டயப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை இந்த ஆண்டு நடைபெறவுள்ளது.இப்படிப்பில் வேளாண் இடுபொருள் விற்பனையாளர்கள்,வேளாண் சார்ந்த தொழில் புரிவோர் மற்றும் சுயதொழில் புரிவோர் சேர்ந்து பயன் பெறலாம்.
    பத்தாம் வகுப்பில் தேர்ச்சி மற்றும் தோல்வி அடைந்தவர்களும்,18 வயது நிரம்பியவர்களும் இப்படிப்பில் சேரலாம்.  இதற்கான விண்ணப்ப படிவத்தை  w‌w‌w.‌t‌n​a‌u.​a​c.‌i‌n   என்ற இணையதளத்தில், பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.  மேலும் விவரங்களுக்கு 9442111048 அல்லது 94980 56721 என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai