அன்பில் மாரியம்மன் கோயிலில் மே19இல் பஞ்சப் பிரகார விழா

திருச்சி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அன்பில் மாரியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (மே 19) பஞ்சப் பிரகார திருவிழா நடைபெறவுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அன்பில் மாரியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (மே 19) பஞ்சப் பிரகார திருவிழா நடைபெறவுள்ளது.
இதுதொடர்பாக கோயில் நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
திருவரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயிலின் உபகோயிலாக லால்குடி வட்டம், அன்பில் மாரியம்மன் கோயில் உள்ளது. இங்கு அம்மன் முதலில் சுயம்புவாக அவதரித்து, பின்னர் சுதை வடிவிலும் அமையப் பெற்றதாக ஐதீகம். உத்ஸவர் உலோகத்தால் செய்யப்பட்டுள்ளார். சீதளபரமேஸ்வரி என்ற திருநாமத்துடன் விளங்கும் இந்த அம்மன், சமயபுரம் மாரியம்மனுக்கு சகோதரி எனக் கூறப்படுகிறார். அம்மை மற்றும் கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டோர் இங்கு வந்து தங்கி அம்பாள் திருச்சுற்றில் உள்ள நீர்த்தொட்டியில் தண்ணீர் நிரப்பி அபிஷேக தீர்த்தத்தை உடலில் தெளித்துக் கொண்டால் குணம் பெறுவர் என்பது ஐதீகம். கண் நோயால் பாதிக்கப்பட்டோர் இங்கு வந்து பச்சிலை சாறு பெற்று குணமடைகின்றனர்.
இத்தகைய பெருமை மிக்க இக் கோயிலில் பங்குனி மாதம் பூச்சொரிதல் விழாவும், வைகாசி மாதம் பஞ்சப் பிரகார உத்ஸவமும் நடைபெறும்.
இதன்படி, வரும் 19ஆம் தேதி பஞ்சப்பிரகார திருவிழா நடைபெறவுள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை 11.30-க்கு அம்மனுக்கு மகா அபிஷேகமும், மாலை 6.30-க்கு அம்மன் திருவீதி உலாவும், திங்கள்கிழமை விடையாற்றி திருவிழாவும் நடைபெறும்.  ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com