முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி
ஸ்ரீரங்கம் கோயிலில் தமிழிசை சுவாமி தரிசனம்
By DIN | Published On : 18th May 2019 09:03 AM | Last Updated : 18th May 2019 09:03 AM | அ+அ அ- |

ஸ்ரீரங்கம் கோயிலில் வெள்ளிக்கிழமை காலை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தராஜன் வழிபட்டார்.
கோயிலுக்கு வந்த அவரை பாஜக பிரமுகர்கள் வரவேற்றனர். பின்னர் சன்னதிகளில் வழிபட்ட பின்னர் அவர் கூறியது:
தேர்தலில் எங்களுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. பிரதமர் மோடி பெரும்பான்மையான இடங்களில் வெல்வது உறுதி. இது எழுதப்பட்டு விட்ட தீர்ப்பு. இடைத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும். ஸ்டாலின் சொல்வதுபோல எந்த மாற்றமும் ஏற்படாது. மத்திய அரசின் வளர்ச்சித் திட்டங்கள் தமிழகத்தில் தொடரும் என்றார் அவர். பாஜக நிர்வாகிகள் கோவிந்தன், திருவேங்கடம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.