மணப்பாறை அருகே வனவிலங்கு நடமாட்டம்

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே  கிராம பகுதிகளில் மர்ம விலங்கு நடமாட்டம் குறித்து கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே  கிராம பகுதிகளில் மர்ம விலங்கு நடமாட்டம் குறித்து கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி வனச்சரகத்திற்குட்பட்ட குறுமலை மற்றும் பாலமாலை காப்புகாடுகளுக்கு நடுவே உள்ள சிறு கிராம பகுதி குப்பனார்பட்டி குறுமலைக்களம். இங்கு கடந்த மே 10-ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு விவசாயி வடிவேல் என்பவரது செம்மறியாடு பட்டியில் புகுந்த மர்ம வனவிலங்கு ஆடுகளை கடித்து குதறியுள்ளது. இதில் 8 ஆடுகள் உயிரிழந்த நிலையில், 6 ஆடுகள் கவலைக்கிடமாக உள்ளன. இச்சம்பவத்தைப்போல அப்பகுதியில் ஆங்காங்கே ஆடுகளின் உயிரிழப்பு நடந்துள்ளதாம். இதில் சுமார் 50 ஆடுகள் வரை விவசாயிகள் இழந்துள்ளனர். மழை இல்லாத விவசாயிகள் கால்நடை வளர்ப்பை மட்டுமே நம்பியிருக்கும் சூழலில் கால்நடைகளை மர்ம வனவிலங்கு தாக்குவதால்  வேதனையில் உள்ளனர்.
மர்ம வனவிலங்கு ஆடுகளின் கழுத்துப் பகுதிகளை மட்டும் குறி வைத்து தாக்கி இரண்டு கூர்மையான குழிகளை ஏற்படுத்தி அதன் மூலம் இரத்தம் முழுவதையும் உறிஞ்சுவதாகக் கூறப்படுகிறது. தற்போது வியாழன், வெள்ளிக்கிழமைகளில் செந்நிறத்தில் நாய் போன்ற வனவிலங்கு விவசாய குடியிருப்பு பகுதியில் இரவில் நடமாடுவதாகக் கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் இரவில் நடமாட முடியாமலும்,  அச்சத்துடனும் உறங்கி வருவதாகத் தெரிவிக்கின்றனர். இதையடுத்து மாவட்ட வன அலுவலர் உத்தரவின்பேரில் மணப்பாறை மற்றும் துவரங்குறிச்சி வனச்சரகத்திற்குட்பட்ட வனவர்கள் தலைமையிலான வனத்துறையினர், அப்பகுதி மக்களின் உதவியுடன் வெள்ளிக்கிழமை இரவு மர்ம வனவிலங்கு குறித்து கண்டறிய குறுமலைக்கள வனப்பகுதியில் இரவில் முகாமிட்டு மர்ம வனவிலங்கை தேடி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com