சமயபுரம் மாரியம்மன் கோயிலில் நேர்த்திக் கடன் நிறைவேற்றிய ஐ.ஜே.கே. நிர்வாகிகள்
By DIN | Published On : 27th May 2019 10:13 AM | Last Updated : 27th May 2019 10:13 AM | அ+அ அ- |

பெரம்பலூர் மக்களவைத் தேர்தலில் இந்திய ஜனநாயகக் கட்சி நிறுவனர் டி.ஆர்.பாரிவேந்தர் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, சமயபுரம் மாரியம்மன் கோயிலில் அக்கட்சி நிர்வாகிகள் ஞாயிற்றுக்கிழமை நேர்த்திக் கடன் செலுத்தினர்.
பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்ட பாரிவேந்தர் வெற்றி பெற்றால் முடி காணிக்கை செலுத்துவதாக, கட்சியின் வடக்கு மாவட்டத் தலைவர் ராயர் உள்ளிட்டோர் வேண்டி கொண்டார்களாம். தேர்தலில் பாரிவேந்தர் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், உப்பிலியபுரம் ஒன்றியம், துறையூர் நகரக் கழக நிர்வாகிகள் சுமார் 25 பேர் மாவட்டத் தலைவர் ராயர் தலைமையில் சமயபுரம் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை முடிகாணிக்கை செலுத்தி, தங்கள் நேர்த்திக் கடனை நிறைவேற்றினர்.