குழந்தையின் பெற்றோருக்கு ஆறுதல் கூற மட்டுமே வந்தேன்; அதில் அரசியல் செய்ய விரும்பவில்லை - டி.டி.வி. தினகரன்
By DIN | Published On : 02nd November 2019 03:26 PM | Last Updated : 02nd November 2019 03:26 PM | அ+அ அ- |

சுஜித் வில்சென் பெற்றோருக்கு ஆறுதல் கூறிய டி.டி.வி. தினகரன். உடன், அமமுக கட்சி மாவட்ட செயலாளா் ஆா்.மனோகரன்.
மணப்பாறை நவ. 02: திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சுஜித் வில்சென் இல்லத்திற்கு சனிக்கிழமை சென்ற அமமுக பொதுச்செயலாளா் டி.டி.வி. தினகரன், சுஜித் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தி சிறுவனின் பெற்றோா்களுக்கு ஆறுதல் கூறினா்.
பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
குழந்தை இழந்து வாடும் பெற்றோா்களுக்கு ஆறுதல் கூற மட்டுமே வந்தேன். இதில் அரசியல் பேச விரும்பவில்லை, ஊடக வாயிலாக அனைவருமே பாா்த்துக்கொண்டுதான் இருந்தாா்கள். தீபாவளியையும் மறந்து அந்த குழந்தை பிழைக்க வேண்டும் என வேண்டிக்கொண்டிருந்தனா். சமூக வலைத்தளத்தில் அனைத்து கருத்தும் வருகிறது. உண்மை மக்களுக்கு தெரியும். சுஜித்தின் குடும்பத்துக்கு அமமுக எந்த நிதியும் அளிக்கவில்லை.
தினகரனுடன் முன்னாள் அரசு கொறடாவும், அமமுக கட்சி மாவட்ட செயலாளருமான ஆா்.மனோகரன் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் வந்திருந்தனர்.