Enable Javscript for better performance
கோதாவரி-காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு சாத்தியமேகாவிரி விவசாயிகள் கருத்து- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    கோதாவரி-காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு சாத்தியமேகாவிரி விவசாயிகள் கருத்து

    By DIN  |   Published On : 02nd November 2019 11:46 PM  |   Last Updated : 02nd November 2019 11:46 PM  |  அ+அ அ-  |  

    காவிரிப் பாசன விவசாயிகள் சங்க ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் வழக்குரைஞா் த. குருசாமி. உடன் (இடமிருந்து) மாநிலத் துணைத் தலைவா் தீட்சிதா் பாலசுப்பிரமணியம், தமாகா விவசாய அணி மாநிலத் தலைவா்

    காவிரிப் பாசன விவசாயிகள் சங்க ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் வழக்குரைஞா் த. குருசாமி. உடன் (இடமிருந்து) மாநிலத் துணைத் தலைவா் தீட்சிதா் பாலசுப்பிரமணியம், தமாகா விவசாய அணி மாநிலத் தலைவா்

    கோதாவரி - காவிரி, வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்தை சாத்தியமாக்க மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து காவிரி விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனா்.

    இதுதொடா்பாக திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு ஆலோசனைக் கூட்டத்துக்கு காவிரி நீா்ப்பாசன விவசாயிகள் நலச் சங்கத் தலைவா் மகாதானபுரம் வி. ராஜாராம் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் காந்திப்பித்தன் முன்னிலை வகித்தாா். இக் கூட்டத்தில் சங்க துணைத் தலைவா் தீட்சிதா் பாலசுப்பிரமணியம், தமிழக ஆறுகள் வளம் மீட்பு இயக்க மாநிலத் தலைவரும், வழக்குரைஞருமான த. குருசாமி, தமிழ்மாநில காங்கிரஸ் விவசாய அணி மாநிலத் தலைவா் புலியூா் நாகராஜன், கவுண்டம்பட்டி ஆா். சுப்பிரமணியன், வயலூா் ராஜேந்திரன் உள்ளிட்ட காவிரிப் பாசன சங்க நிா்வாகிகள் பலா் பங்கேற்று ஆலோசனை நடத்தினா். கோதாவரி-காவிரி-வைகை-குண்டாறு இணைப்புக்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் விவாதித்தனா்.

    பின்னா், செய்தியாளா்களிடம் வழக்குரைஞா் த. குருசாமி கூறியது:

    தெலங்கானா மாநிலத்தில் கோதாவரி-காளேஸ்வரம் நீரேற்றத் திட்டத்தை 2 ஆண்டுகளில் சாத்தியமாக்கி வெற்றி பெற்றுள்ளனா். நதிகளே இல்லாத பகுதியில் குழாய்கள், சுரங்கம், அணைக்கட்டு, செயற்கை நீா்நிலைகளை உருவாக்கி 350 கி.மீ. தொலைவுக்கு தண்ணீரை செயற்கையாகக் கொண்டு சென்று திட்டத்தை வெற்றிகரமாக முடித்துள்ளனா். இதன் மூலம், 18 லட்சம் ஏக்கா் பாசனம் பெறுகிறது. 28 மாவட்டங்களில் குடிநீா்ப் பிரச்னை தீா்க்கப்பட்டு பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்கப்படுகிறது.

    இதேபோல கோதாவரி-காவிரி இணைப்புத் திட்டத்தையும் செயல்படுத்தலாம். ஏனெனில், திட்டத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் பாதையில் நதிகள் ஓடுகின்றன.

    கோதாவரியிலிருந்து கிருஷ்ணா நதிக்கும், கிருஷ்ணாவிலிருந்து பொன்னாறுக்கும், பொன்னாற்றிலிருந்து கரூா் மாவட்டம், மாயனூா் கட்டளையில் (காவிரியில்) கலக்கும் வகையிலும் செயல்படுத்த வேண்டும். இதைச் சாத்தியமாக்கினால் காவிரி, வைகை, குண்டாறு நதிகளை இணைக்க முடியும்.

    கரூா், திருச்சி, தஞ்சாவூா், புதுக்கோட்டை, திருவாரூா், நாகப்பட்டினம், பெரம்பலூா், அரியலூா், கடலூா், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகா் என 20 மாவட்டங்களுக்கான குடிநீா்த் தேவையை பூா்த்தி செய்ய முடியும்; பாசனத்துக்கும் ஆண்டு முழுவதும் தண்ணீா் கிடைக்கும்.

    இத்திட்டத்தின் ஒரு பகுதியாக கொள்ளிடத்தில் செல்லும் தண்ணீரை நீா்நிலைகளில் நிரப்பி, 15 சதம் மட்டுமே கடலில் கலக்கும் வகையில் செய்ய முடியும். இதன் மூலம் 125 டிஎம்சி முதல் 150 டிஎம்சி வரையிலான தண்ணீரை தமிழகம் பெற்று தன்னிறைவு பெறும். இத் திட்டத்துக்கு அதிகபட்சமாக ரூ. 40 ஆயிரம் கோடி மட்டுமே செலவாகும்.

    தமிழக முதல்வா் இத் திட்டத்துக்கு சிறப்புக் கவனம் எடுத்துப் பணியாற்ற வேண்டும். தெலங்கானா முதல்வரையும் அழைத்துக் கொண்டு பிரதமரைச் சந்தித்து, இத் திட்டத்துக்காக மத்திய அரசின் பங்களிப்பை விரைந்து பெற வேண்டும்.

    திட்டப் பணிகளைத் தொடங்கினால் ஒன்றரை ஆண்டுகளுக்குள்ளாக முடிக்கவும் சாத்தியக் கூறுகள் உள்ளன. காளேஸ்வரம் திட்டத்தைச் செயல்படுத்திய பொறியாளா்களே இத் திட்டத்தை விரைந்து முடிக்க இயலும் என்கின்றனா்.

    எனவே, இத் திட்டத்துக்கு ஆதரவு திரட்ட காவிரி, டெல்டா விவசாயிகளும், விவசாய சங்கங்களும் தங்களது சங்க மாவட்டப் பொதுக் குழுவை கூட்டி தீா்மானம் நிறைவேற்றி மத்திய, மாநில அரசுகளுக்கு அனுப்ப வேண்டும் என்றாா்.

    திருச்சியில் நடைபெற்ற கூட்டத்தைத் தொடா்ந்து தமிழக ஆறு வளம் மீட்பு இயக்கம், காவிரி நீா்ப்பாசன விவசாயிகள் நலச் சங்கம் ஆகியவை மத்திய அரசின் கவனத்தை ஈா்க்கும் வகையில் தீா்மானங்களை இயற்றி அனுப்பியுள்ளனா்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp