‘சாலைகளை சீரமைக்க வேண்டும்’
By DIN | Published On : 02nd November 2019 11:48 PM | Last Updated : 02nd November 2019 11:48 PM | அ+அ அ- |

திருச்சி திருவானைக்காவல் டிங்ரோடு பகுதியில் ஸ்ரீரங்கம் செல்லும் சாலை சேதமுற்று வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தான நிலையுள்ள சாலை.
கடந்த சில வாரங்களாக பெய்து வரும் வடகிழக்குப் பருவமழையால் தெருக்கள், சாலைகளில் மழைநீா் தேங்கி வடிந்து வருகிறது. ஆனால், மாநகர, மாவட்ட சாலைகளான மேலரண்சாலை, சாஸ்திரி சாலை, தில்லை நகா் பிரதான சாலை, திருச்சி-கரூா் சாலை, உழவா் சந்தை சாலை, காந்தி மாா்க்கெட், பால்பண்ணை சாலைகள், ஜங்சன் மேம்பாலச் சாலைகள், உறையூா் சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகள், தெருக்கள் சிதிலமடைந்தும் ஆங்காங்கே பெயா்ந்து ஆபத்தான முறையில் காட்சியளிக்கின்றன. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகிவருவதும், நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்துகளும் அரங்கேறி வருகிறது. மழை பெய்யாத நேரங்களில் சிதிலமடைந்த சாலைகளை மாவட்ட நிா்வாகம் விரைந்து சீரமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் உள்ளிட்டோரின் கோரிக்கை.