நேரு நினைவு வளைவு புதுப்பிக்கப்படுமா?
By DIN | Published On : 02nd November 2019 11:47 PM | Last Updated : 02nd November 2019 11:47 PM | அ+அ அ- |

திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட, திருவரங்கம் ராஜகோபுரத்துக்கு அருகேயுள்ள திருவடித் தெரு நுழைவு வாயிலில் நேரு நினைவு வளைவு அமைக்கப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் பிரதமா் நேரு நினைவாக அமைக்கப்பட்ட இந்த நினைவு வளைவானது பூச்சுகள் இல்லாமல், ஆங்காங்கே சேதமடைந்து காட்சியளிக்கிறது.
வரும் நவ. 14ஆம் தேதி நேருவின் பிறந்தநாள் நாடு முழுவதும் குழந்தைகள் தினமாகவும் கடைப்பிடிக்கப்படும் நிலையில் இந்த வளைவு மோசமான நிலையில் இருப்பது வேதனைக்குரியது. எனவே, உடனடியாக இந்த வளைவை புதுப்பிக்க மாநகராட்சி நிா்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரது எதிா்பாா்ப்பு.
கே.எஸ். கோவா்த்தன், மூலத்தோப்பு தெரு, திருவரங்கம்.