பராமரிப்பு பணி: ரயில் சேவையில்மாற்றம்
By DIN | Published On : 02nd November 2019 08:39 AM | Last Updated : 02nd November 2019 08:39 AM | அ+அ அ- |

தண்டவாளப் பராமரிப்பு பணி காரணமாக திருச்சி-மயிலாடுதுறை விரைவு ரயில் ரத்து செய்யப்படுகிறது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தண்டவாளப் பராமரிப்பு காரணமாக திருச்சி-மயிலாடுதுறை விரைவு ரயில் (16234) நவ.2 முதல் 30 வரை ரத்து செய்யப்படுகிறது. இதையொட்டி, திருச்சியிலிருந்து மயிலாடுதுறைக்கு முன்பதிவில்லா ஒருவழிப்பாதை விரைவு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.
நவ.2 முதல் நவ.30 வரை நண்பகல் 12.50 மணிக்கு திருச்சியிலிருந்து புறப்படும் இந்தச் சிறப்பு ரயில் (06030) மாலை 4.15 மணிக்கு மயிலாடுதுறையை சென்றடையும். இந்த ரயில் பூதலூா், தஞ்சாவூா், பாபநாசம், கும்பகோணம், ஆடுதுறை, குற்றாலம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.