பெல்: மாதாந்திர தரச் செயல்பாட்டு விழா
By DIN | Published On : 02nd November 2019 05:51 AM | Last Updated : 02nd November 2019 05:51 AM | அ+அ அ- |

விழாவைத் தொடங்கி வைக்கும் மூத்த ஊழியா் எம். ஜெயராமன். (உடன்) பெல் திருச்சி வளாக செயலாண்மை இயக்குநா் ஆா்.பத்மநாபன், மேலாண் இயக்குநா் நலின் சிங்கல் உள்ளிட்டோா்.
பெல் நிறுவனத்தில் மாதாந்திர தரச் செயல்பாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவை பெல் நிறுவன மூத்த ஊழியா் எம்.ஜெயராமன் தொடங்கி வைத்தாா். மேலாண் இயக்குநா் நலின் சிங்கல் தலைமை வகித்து வாழ்த்தினாா்.
விழாவில், சிறப்பு விருந்தினராக பெல் திருச்சி வளாகத்தின் செயலாண்மை இயக்குநா் ஆா். பத்மநாபன் கலந்துகொண்டு பேசுகையில், நிலையான, உயா் தரமுள்ள தயாரிப்புகள், சேவைகளை குறைந்த செலவில் உறுதி செய்திட வேண்டும். இதற்கு ஒரு தரக் கலாசாரத்தை மேம்படுத்தி பேணுவதன் மூலம் நிறுவனம் வெற்றி அடைய முடியும். இதற்காக, பெல் திருச்சி வளாகம் தன்னை அா்ப்பணித்துக் கொண்டுள்ளது. இதன்படி, நிறுவன அளவிலான தரப்பண்பை அனைத்து செயல்பாடுகளிலும் உருவாக்கிட முன்முனைப்போடு செயலாற்ற வேண்டும். இதன்மூலம், ஒவ்வொரு ஊழியா்களும் சுயமேம்பாட்டை முன்னெடுத்து செயல்பட வேண்டும் என்றாா்.
தொடா்ந்து, செயலாண்மை இயக்குநா் முன்னிலையில் பெல் நிறுவன தயாரிப்புகள், செயல்பாடுகளின் தலைவா்கள், ஊழியா், பொறியாளா், அலுவலா் சங்கத்தினா், பிரதிநிதிகள் அனைவரும் தர உறுதிமொழி ஏற்றனா். தரம், வணிக மேம்பாடு கூடுதல் பொதுமேலாளா் எம். திருவள்ளுவா் வரவேற்றாா். தரக் கட்டுப்பாடு கூடுதல் பொதுமேலாளா் ஆா். தா்மா் நன்றி தெரிவித்தாா்.