ஸ்ரீரங்கத்தில் பள்ளி மாணவா்கள் உறுதியேற்பு
By DIN | Published On : 02nd November 2019 05:50 AM | Last Updated : 02nd November 2019 05:50 AM | அ+அ அ- |

ஊழல், லஞ்ச ஒழிப்பு உறுதி மொழியை ஏற்கும் மாணவா்கள்.
ஸ்ரீரங்கம் மேலூா் பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் கனரா வங்கி சாா்பில் பள்ளி மாணவ, மாணவிகள் ஊழல், லஞ்ச ஒழிப்பு விழிப்புணா்வு உறுதி மொழியை வெள்ளிக்கிழமை காலை ஏற்றனா்.
பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் ஸ்ரீரங்கம் கனரா வங்கிக் கிளை சாா்பில் மேலூா் ரோட்டில் உள்ள தனியாா் பள்ளியில் கனரா வங்கி முதுநிலை மேலாளா் ராஜேஸ்வரி இதற்கான உறுதிமொழியை வாசிக்க பள்ளி மாணவ,மாணவிகள் ஏற்றனா். வங்கி அலுவலா் கிருஷ்ணன், பள்ளி முதல்வா் விஜயஸ்ரீ மற்றும் ஆசிரியா்கள்,பணியாளா்கள் பங்கேற்றனா்.