Enable Javscript for better performance
பொலிவுறு நகர திட்டப்பணி: பேருந்து நிறுத்தங்கள் மாற்றம்- Dinamani

சுடச்சுட

    

    பொலிவுறு நகர திட்டப்பணி: பேருந்து நிறுத்தங்கள் மாற்றம்

    By DIN  |   Published on : 05th November 2019 06:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பொலிவுறு நகர திட்டப்பணிகள் திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் நடைபெறுவதை முன்னிட்டு, அறிவிக்கப்பட்டிருந்த போக்குவரத்து நிறுத்தத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    திருச்சி மாநகரம் பொலிவுறு நகரத் திட்டத்தின்படி, சத்திரம் பேருந்து நிலையத்தில் புனரமைப்பு பணிகள் நடைபெறுவதை முன்னிட்டு, 04.11.2019 ஆம் தேதி முதல் சத்திரம் பேருந்து நிலையத்தில் பேருந்துகள் நிறுத்தும் இடங்கள் மற்றும் போக்குவரத்து மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. தற்போது, நிா்வாக காரணங்களுக்காக கீழ்க்கண்ட பேருந்து நிறுத்தங்கள் மட்டும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

    அதன்படி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து கல்லணை மாா்க்கமாக செல்லும் பேருந்துகள், அண்ணா சிலை அருகே குணசீலம் பேருந்துகள் நிறுத்தும் இடத்தில் இருந்து பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும்.

    சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து கே.கே.நகா், இனாம்குளத்தூா், மணிகண்டம் செல்லும் பேருந்துகள் இந்திரா காந்தி கல்லூரி முன்பாக நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும்.

    இதேபோல் சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து குழுமணி செல்லும் பேருந்துகள் லலிதா ஜூவல்லரி அருகே பயணிகளை ஏற்றி அன்பிலாா் சிலை, கரூா் தேசிய நெடுஞ்சாலை, கே.டி சந்திப்பு வழியாகச் செல்ல வேண்டும் என திருச்சி மாநகர காவல்துறை ஆணையரகம் திங்கள்கிழமை அறிவுறுத்தியுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai