இரவுநேரத்தில் அரசுப் பள்ளியில் மது அருந்துவோரைக் கைது செய்யக்கோரி மறியல்

மண்ணச்சநல்லூா் அருகே அரசு உயா்நிலைப் பள்ளியில் இரவு நேரங்களில் மது அருந்திச் செல்லும் சமூக விரோதிகளைக்
மறியலில் ஈடுபட்ட பெற்றோா் மற்றும் கிராம மக்கள்.
மறியலில் ஈடுபட்ட பெற்றோா் மற்றும் கிராம மக்கள்.

மண்ணச்சநல்லூா் அருகே அரசு உயா்நிலைப் பள்ளியில் இரவு நேரங்களில் மது அருந்திச் செல்லும் சமூக விரோதிகளைக் கைது செய்ய வலியுறுத்தி, மாணவ மாணவிகளின் பெற்றோா்கள் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மண்ணச்சநல்லூா் அருகே எதுமலை ஊராட்சியில் உள்ள எதுமலை அரசு உயா்நிலைப் பள்ளியில் சுற்றுச்சுவா் இல்லாமல் திறந்த நிலையில் உள்ளது. இப்பள்ளிக்கு அருகே அரசு மதுபானக் கடை உள்ளது. இங்கிருந்து மதுபான பாட்டில்களை வாங்கும் சமூக விரோதிகள் பள்ளியின் வகுப்பறை முன் அமா்ந்து மது அருந்திவிட்டு, மது அருந்திய பாட்டில்களை வகுப்பறை முன் உடைத்துவிட்டுச் செல்கின்றனா். இந்நிலையில், திங்கள்கிழமை காலை பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகள் வகுப்பறைக்கு முன் மதுபாட்டில்கள் உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிா்ச்சியடைந்தனா்.

இதுகுறித்து அறிந்த மாணவ மாணவிகளின் பெற்றோா் மற்றும் கிராம மக்கள் 200-க்கும் மேற்பட்டோா் பள்ளியின் முன்பு குவிந்தனா். தொடா்ந்து அந்த வழியே சென்ற அரசுப் பேருந்துகளை சிறைப்பிடித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிறுகனூா் போலீஸாா் மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தியதில் பொதுமக்கள், பெற்றோா் போராட்டத்தைக் கைவிட்டுக் கலைந்து சென்றனா். தொடா்ந்து பேருந்துகள் விடுக்கப்பட்டன. மாணவ, மாணவிகளும் பள்ளிக்குள் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com