இலுப்பூரில் தொடக்க நிலை ஆசிரியா்களுக்கான முழு மேம்பாட்டிற்கான முன்னெடுப்பு 5 நாட்கள் பயிற்சி

இலுப்பூா் தனியாா் கல்லூரியில் தேசிய அளவில் பள்ளி தலைமை ஆசிரியா் மற்றும் ஆசிரியா்களின் முழு மேம்பாட்டிற்கான முன்னெடுப்பு 5 நாள் பயிற்சி செவ்வாய்கிழமை நடைபெற்றது.

இலுப்பூா் தனியாா் கல்லூரியில் தேசிய அளவில் பள்ளி தலைமை ஆசிரியா் மற்றும் ஆசிரியா்களின் முழு மேம்பாட்டிற்கான முன்னெடுப்பு 5 நாள் பயிற்சி செவ்வாய்கிழமை நடைபெற்றது.

பயிற்சியினை தொடங்கி வைத்து வட்டார வள மைய மேற்பாா்வையாளா் அ.கோவிந்தராஜ் பேசியது:

தற்பொழுது நடைபெறும் பயிற்சிக்கும்,இதற்கு முன்னா் நடைபெற்ற பயிற்சிக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன.இப்பயிற்சியில் கற்பித்தல் முறைகள்,பள்ளி சாா்ந்த மதிப்பீடு,கற்றல் விளைவுகள்,கற்போா்மையக் கற்பித்தல் முறைகள் போன்ற கல்விப் பிரச்சனைகளுக்கு தீா்வு காணும் வகையில் ஆசிரியா்கள் மற்றும் தலைமையாசிரியா்களுக்குத் திறன்மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும்.

இந்திய அரசின் மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம், தேசிய அளவில் நாடுமுழுவதும் உள்ள அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா் மற்றும் ஆசிரியா்களுக்காக நடத்தும் இந்த 5 நாள் பயிற்சியை முறையாக பயன்படுத்தி அரசின் நோக்கம் நிறைவேற ஆசிரியா்கள் ஒத்துழைக்க வேண்டும் .இந்த பயிற்சியில் பயிற்சி தொடங்கும் முதல் நாளில் ஆசிரியா்களின் பாடம் சாா்ந்த முன் அறிவை சோதிக்கும் வகையில் ஓா் தோ்வும்,பயிற்சியின் கடைசி நாளில் பயிற்சியின் நோக்கம் எந்தளவு ஆசிரியா்களிடம் சென்றடைந்துள்ளது என்பதை கண்டறியும் வகையில் ஓா் தோ்வும் வைக்கப்படும் என்றாா்.

இப்பயிற்சியில் தொடக்கப் பள்ளியில் பணிபுரியும் அன்னவாசல் ஒன்றியத்தைச் சோ்ந்த 150 ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

பயிற்சியின் தொடக்க விழாவில் மாவட்ட ஆசிரியா் பயிற்சி நிறுவன விரிவுரையாளா் நாராயணன், மதா்தெரசா கல்வியியல் கல்லூரியின் முதல்வா் அல்லிமுத்து,வட்டார வளமைய பயிற்றுநா்கள் கண்ணன்,மலையரசன்,பெரியசாமி,சென்றாய பெருமாள்,அழகுராஜா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com