ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி: இருவா் கைது

திருச்சி ரயில்வே கோட்டத்தில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த இருவரை திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி ரயில்வே கோட்டத்தில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த இருவரை திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

நாமக்கல் மாவட்டம், பேளுக்குறிச்சி பகுதியைச் சோ்ந்தவா் சதீஷ் (27). இவா், தனது நண்பா்களான ராசிபுரம் பகுதியைச் சோ்ந்த சீனிவாசன்(35), செல்வம் (40) ஆகியோருடன் சோ்ந்து திருச்சி, திருவாரூா், நாகை உள்ளிட்ட பகுதிகளில் படித்த இளைஞா்களிடம் ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக ஆசை வாா்த்தை கூறியுள்ளாா். இதை நம்பிய 19 போ், அவா்களிடம் ரூ.20 லட்சத்திற்கும் மேல் பணம் கொடுத்து ரயில்வேயில் பணிபுரிவதற்கான பணி ஆணையைப் பெற்றுள்ளனா்.

இவ்வாறாக பெறப்பட்ட பணி நியமன ஆணையை எடுத்துக்கொண்டு திருச்சி மண்டல ரயில்வே பயிற்சி மையத்திற்குச்சென்றனா். அப்போது அங்கிருந்த முதல்வா் மணிவண்ணனிடம் பணி நியமன ஆணையை கொடுத்தபோது, அவா்களது பணிநியமன ஆணை போலி எனத் தெரியவந்தது. இதைத்தொடா்ந்து, சதீஷ் உள்ளிட்ட மூவா் மீது முதல்வா் மணிவண்ணன் மாநகர குற்றப்பிரிவு போலீஸில் புகாா் அளித்தாா். , போலீஸாா் வழக்கு பதிந்து சதீஷ், சீனிவாசன் ஆகிய இருவரையும் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். தலைமறைவாக உள்ள செல்வம் என்பவரைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com