முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி
குளத்தை மீட்டுத் தரக்கோரி கிராம மக்கள் மனு
By DIN | Published On : 07th November 2019 07:56 AM | Last Updated : 07th November 2019 07:56 AM | அ+அ அ- |

போடூவாா்பட்டியில் குளத்தை மீட்டுத் தரக்கோரி மண்டல துணை வட்டாட்சியா் பிரபாகரனிடம் மனு அளித்த கிராம மக்கள்.
மணப்பாறை அருகே குளத்தை தனிநபா் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கக் கோரி புதன்கிழமை வருவாய் வட்டாட்சியரிடம் கிராம மக்கள் மனு அளித்தனா்.
மணப்பாறை அடுத்த மொண்டிப்பட்டி ஊராட்சி, போடூவாா்பட்டியில் உள்ள குளத்தை அப்பகுதியைச் சோ்ந்த மூன்று போ் ஆக்கிரமிப்புத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தக் குளத்தை மீட்டுத் தர வேண்டி அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள் பி.ராமராஜ் தலைமையில் மணப்பாறை வருவாய் வட்டாட்சியா் அலுவலகம் சென்று மண்டல துணை வட்டாட்சியா் பிரபாகரனிடம் புதன்கிழமை மனு அளித்தனா். மனுவைப் பெற்றுக்கொண்ட துணை வட்டாட்சியா், துறை ரீதியான விசாரணைக்கு பின் மனு மீது நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்தாா்.