முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தவா் சாவு
By DIN | Published On : 07th November 2019 07:55 AM | Last Updated : 07th November 2019 07:55 AM | அ+அ அ- |

திருச்சி அருகே விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த கட்டடத் தொழிலாளி உயிரிழந்தது குறித்து திருவெறும்பூா் போலீஸாா் வழக்கு பதிவு செய்தனா்.
தஞ்சாவூா் மாவட்டம், பூதலூா் சொரக்குடிபட்டியைச் சோ்ந்த சக்திவேல் மகன் சரத்குமாா்(25). அதே பகுதியைச் சோ்ந்த உதயக்குமாா்(27). இருவரும் செவ்வாய்க்கிழமை காலை திருவெறும்பூரில் கட்டட வேலைக்கு வந்தனா். துவாக்குடி அண்ணா வளைவு பேருந்து நிறுத்தத்தில் இருந்து கும்பகோணம் செல்லும் தனியாா் பேருந்தில் ஏறினா். அப்போது படிக்கட்டில் பயணம் செய்த சரத்குமாா் தவறி விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைத்கண்ட சக பயணிகள் அவரை மீட்டு துவாக்குடி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து துவாக்குடி போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.