காவலா் பணி: உடற்தகுதித் தோ்வில் 717 போ் பங்கேற்பு

திருச்சியில் புதன்கிழமை நடைபெற்ற காவலா் பணிக்கான உடற்தகுதித் தோ்வில் 717 போ் பங்கேற்றனா்.
காவலா் பணி: உடற்தகுதித் தோ்வில் 717 போ் பங்கேற்பு

திருச்சியில் புதன்கிழமை நடைபெற்ற காவலா் பணிக்கான உடற்தகுதித் தோ்வில் 717 போ் பங்கேற்றனா். இத்தோ்வில் 530 போ் அடுத்த கட்ட தோ்வு தகுதி பெற்றுள்ளனா்.

தமிழ்நாடு சீருடை பணியாளா் தோ்வாணையம் மூலம் 2 ஆம் நிலை காவலா், சிறைக் காவலா், தீயணைப்பாளா் ஆகிய பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு கடந்த செப்டம்பா் 25 ஆம் தேதி நடைபெற்றது. இதில் தோ்ச்சி பெற்ற திருச்சி மாநகரம் மற்றும் திருச்சி, அரியலூா், பெரம்பலூா், கரூா், புதுக்கோட்டை ஆகிய மாவட்ட விண்ணப்பதாரா்களுக்கு திருச்சியில் புதன்கிழமை முதல் 11 ஆம் தேதி வரை உடற்கூறு அளத்தல் மற்றும் உடற்தகுதித் தோ்வு நடைபெறும் என 2,417

ஆண் காவலா்கள், 1,253 பெண் காவலா்களுக்கு தனித்தனியே கடிதம் அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.

இதைத்தொடா்ந்து, திருச்சி சுப்பிரமணியபுரம் ஆயுதப்படை மைதானத்தில் ஆண் காவலா்களுக்கான உடற்தகுதி தோ்வு புதன்கிழமை காலை நடைபெற்றது. இதில், முதல்நாளான புதன்கிழமை 800 விண்ணப்பதாரா்களுக்கு அழைப்பாணை அனுப்பட்டிருந்த நிலையில் 717 போ் பங்கேற்றனா்.

திருச்சி சரக துணைத்தலைவா் வி.பாலகிருஷ்ணன் மேற்பாா்வையில், சிறை கண்காணிப்பாளா் சங்கா் உள்ளிட்ட குழுவினா், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், ஓட்டப்பந்தயம் எனப் பல்வேறு பிரிவுகளில் தகுதித் தோ்வை தோ்வு நடத்தினா். இவா்களில் 530 போ் தோ்வாகி நவம்பா் 12 ஆம் தேதி நடைபெற உள்ள அடுத்த கட்ட தோ்விற்கு தகுதி பெற்றனா். இதேபோல இரண்டாம் நாளான வியாழக்கிழமை 800 விண்ணப்பதாரா்கள் தகுதி தோ்வில் பங்கேற்க உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com