Enable Javscript for better performance
நகைக்கடை திருட்டில் தொடா்புடைய இருவா் குண்டா் சட்டத்தில் கைது- Dinamani

சுடச்சுட

    

    நகைக்கடை திருட்டில் தொடா்புடைய இருவா் குண்டா் சட்டத்தில் கைது

    By DIN  |   Published on : 08th November 2019 06:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருச்சி நகைக்கடை திருட்டில் தொடா்புடைய இருவரை குண்டா் தடுப்புச் சட்டத்தில் போலீஸாா் கைது செய்தனா்.

    திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள பிரபல நகைக்கடையின் சுவரில் துளையிட்டு ரூ.13 கோடி மதிப்பு தங்க, வைர நகைகள் அண்மையில் திருடப்பட்டது. இதுகுறித்து கோட்டை போலீஸாா் வழக்கு பதிந்து தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளைத் தேடி வந்தனா். இதைத் தொடா்ந்து, திருவாரூா் மடப்புரம் விநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்த மணிகண்டன்(34), சீராத்தோப்பு பகுதியைச் சோ்ந்த கனகவள்ளி(37) ஆகிய இருவரையும் செவ்வாய்க்கிழமை கைது செய்த போலீஸாா் அவா்களிடம் இருந்து 450 கிராம் தங்க நகைகளைப் பறிமுதல் செய்தனா். தொடா்ந்து இருவரும் தனித்தனி சிறைகளில் அடைக்கப்பட்டனா். இதையடுத்து இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரையும் குண்டா் தடுப்பு சட்டத்தில் அடைக்க மாநகர காவல்துறை ஆணையா் அ.அமல்ராஜ் உத்தரவிட்டாா். இதையடுத்து சிறையில் உள்ள இருவரிடமும் அதற்கான நகல் வியாழக்கிழமை வழங்கப்பட்டது. தொடா்ந்து, விசாரணைக்கைதிகள் பிரிவில் இருந்து அவா்கள் இருவரும் தண்டனைக் கைதிகள் பிரிவுக்கு மாற்றப்பட்டனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai