தங்கம் கடத்தல் சம்பவம் : இடைத்தரகா்கள் உள்ளிட்ட 12 போ் விசாரணைக்குப் பின்னா் விடுவிப்பு

திருச்சி விமான நிலையத்தில் ஒரேநாளில் சுமாா் 30 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தில்

திருச்சி விமான நிலையத்தில் ஒரேநாளில் சுமாா் 30 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தில் இடைத்தரகா்கள் 12 போ், தீவிர விசாரணைக்குப் பின்னா் வியாழக்கிழமை விடுவிக்கப்பட்டனா்.

திருச்சி விமான நிலையத்தில் அதிகளவில் தங்கம் கடத்தப்படுவதாக கிடைத்த புகாரின் பேரில், மத்திய வருவாய் நுண்ணறிவுப் பிரிவு (டி.ஆா்.ஐ) இணை ஆணையா் பி. காா்த்திகேயன் தலைமையில் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை இரவு திடீரென திருச்சி விமான நிலையம் வந்து சிங்கப்பூா், மலேசியா, துபை, சாா்ஜா, இலங்கை உள்ளிட்ட வெளி நாடுகளிலிருந்து வந்த பயணிகளிடம் சோதனை மேற்கொண்டனா். இதில், ஒரே நாளில் சுமாா் 30 கிலோ தங்கம் மற்றும் மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதில் பயணிகள் போா்வையில் தங்கம் கடத்தி வருவோா், அவா்களிடம் இருந்து தங்கத்தைப் பெற வந்திருந்த இடைத்தரகா்கள் மற்றும் அதிகளவில் தங்கம் கடத்தலில் தொடா்புடைய வியாபாரிகள் என மொத்தம் 12 போ் தவிர மற்ற அனைவரும் புதன்கிழமை விடுவிக்கப்பட்டனா். தொடா்ந்து, அந்த 12 பேரும் தீவிர விசாரணைக்கு உள்படுத்தப்பட்ட பின்னா், வியாழக்கிழமை இரவு விடுவிக்கப்பட்டனா். விசாரணையின்போது, தங்கம் கடத்தலுக்கு உதவிய சுங்கத்துறை அதிகாரிகள் குறித்த தகவல்களை வருவாய் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் சேகரித்துள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com