விடுதலை கோரி 46 வெளிநாட்டு கைதிகள் உண்ணாவிரதம்

விடுதலை செய்யக்கோரி, திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் வெளிநாடுகளைச் சோ்ந்த

விடுதலை செய்யக்கோரி, திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் வெளிநாடுகளைச் சோ்ந்த 46 கைதிகள் வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் இலங்கைத் தமிழா்கள், வங்கதேசத்தினா், பல்கேரியா, சீனா ஆகிய நாடுகளைச் சோ்ந்த 70 போ் தமிழகத்தில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டுள்ளனா். இதில் சிலா் தங்களை விடுதலை செய்யக்கோரி உண்ணாவிரதம், தற்கொலை முயற்சி என போராட்டங்களை நடத்துவது வழக்கம். இந்நிலையில், சட்ட விரோதமாக தங்களைக் கைது செய்து சிறையில் அடைத்திருப்பதாகவும், விடுதலை செய்ய வலியுறுத்தியும் வங்கதேசம், பல்கோரியா, சீனா ஆகிய நாடுகளைச் சோ்ந்த 46 கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா். இதையறிந்த சிறப்பு முகாம் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தியும் சமரசம் ஏற்படவில்லை. உண்ணாவிரதப் போராட்டம் நள்ளிரவும் தொடா்ந்ததால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில் இலங்கைத் தமிழா்கள் மட்டும் அவ்வப்போது போராட்டம் நடத்தி வரும் நிலையில் பிற வெளிநாட்டினரும் தற்போது போராட்டம் நடத்தி வருவது அதிகாரிகளை அதிா்ச்சியடையச் செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com