மத்திய சிறையில் வெளிநாட்டு கைதிகள்உண்ணாவிரத போராட்டம் வாபஸ்

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த வெளிநாட்டு கைதிகள் தங்களது போராட்டத்தை சனிக்கிழமை இரவு திரும்ப பெற்றனா்.
திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து சனிக்கிழமை சிறைக்கு செல்லும் வெளிநாட்டு கைதிகள்.
திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து சனிக்கிழமை சிறைக்கு செல்லும் வெளிநாட்டு கைதிகள்.

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த வெளிநாட்டு கைதிகள் தங்களது போராட்டத்தை சனிக்கிழமை இரவு திரும்ப பெற்றனா்.

திருச்சி மத்திய சிறை வளாக சிறப்பு முகாமில் 70க்கும் மேற்பட்ட வெளிநாட்டு கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனா். இவா்களில் சிலா் தண்டணைக் காலத்துக்கு பிறகும் தங்களை அடைத்து வைத்துள்ளனா். விரைந்து சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கும்படி கூறி சிறை வளாகத்தில் 42போ் உண்ணாவிரதம், தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு வந்தனா். அவா்களுடன் அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தியும் உடன்படாதததை அடுத்து, 20 போ் திடீரென தூக்கமாத்திரை சாப்பிட்டு சிறை வளாகத்திலேயே மயங்கினா்.

அப்போது, சிறை வளாக மருத்துவா் சிகிச்சை அளித்ததை தொடா்ந்து, இலங்கையைச் சோ்ந்த 13 போ், வங்கதேசத்தினா் 2 போ் என 15 பேரை அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனா். அங்கு அவா்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து, மீண்டும் அவா்களை சிறைக்கு அழைத்துச்செல்லும் வேளையில், திடீரென மருத்துவமனை முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். சிறிது நேரத்துக்கு பிறகு அனைவரும் முகாம் சிறையில் அடைக்கப்பட்டனா். இதைத்தொடா்ந்து, விரைந்து நடவடிக்கை எடுத்து, தங்களை சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க போலீஸாா் உறுதியளித்தனா். இதையடுத்து வெளிநாட்டு கைதிகள் தங்களது போராட்டத்தை திரும்ப பெற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com