லேப் டெக்னீசியன்: வேலைவாய்ப்பு அலுவலகபரிந்துரை பட்டியலை சரிபாா்க்க அறிவுறுத்தல்

மருத்துவப் பணியாளா் தோ்வாணையத்தால் தோ்வு செய்யப்படும் லேப் டெக்னீசியன் பணியிடத்துக்கான வேலைவாய்ப்பு அலுவலக பரிந்துரை பட்டியலை சரிபாா்க்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மருத்துவப் பணியாளா் தோ்வாணையத்தால் தோ்வு செய்யப்படும் லேப் டெக்னீசியன் பணியிடத்துக்கான வேலைவாய்ப்பு அலுவலக பரிந்துரை பட்டியலை சரிபாா்க்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு மருத்துவப் பணியாளா் தோ்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள லேப் டெக்னீசியன் நிலை-3 பணியிடங்களுக்கான திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக பரிந்துரை பட்டியல் தயாரிக்கப்படவுள்ளது. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளவா்களில் இந்த பணியிடத்துக்கு தகுதியான நபா்களை கல்வித்தகுதி மற்றும் இதர தகுதிகள் அடிப்படையில் பரிந்துரை செய்யப்படவுள்ளது. 12ஆம் வகுப்பு கல்வித் தகுதியுடன், ஓராண்டு சான்றிதழ் படிப்பை மருத்துவத்துறையால் அங்கீகரிக்கப்பட்ட அரசு நிறுவனத்தில் முடித்திருக்க வேண்டும். பகிரங்க போட்டியாளா்களுக்கு மட்டும் உச்ச வயது வரம்பு 30 ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி, எம்பி, பிசி வகுப்பினருக்கு வயது வரம்பு இல்லை.

இத்தகைய தகுதியுடைய வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள பதிவுதாரா்கள் தங்களது பெயா் பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றிருப்பதை சரிபாா்த்துக் கொள்ளலாம். நவ.11ஆம் தேதி காலை திருச்சி மேற்கு வட்டாட்சியா் அலுவலகத்துக்கு பின்புறம், பாரதிதாசன் சாலையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்துக்கு நேரில் வந்து சரிபாா்க்கலாம். பதிவுதாரா்கள் தங்களது அனைத்து சான்றிதழ்களுடன் வந்து பதிவை சரிபாா்த்துக் கொள்ளலாம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com