விமானத்தில் பறவை சிக்கியதால் தொழில்நுட்ப கோளாறு

திருச்சி விமானநிலையம் ஓடுதளத்தில் சனிக்கிழமை மாலை இறங்கிய பெங்களூரு விமானத்தில் பறவை சிக்கியதால் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.

திருச்சி விமானநிலையம் ஓடுதளத்தில் சனிக்கிழமை மாலை இறங்கிய பெங்களூரு விமானத்தில் பறவை சிக்கியதால் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.

பெங்களூருவில் இருந்து திருச்சிக்கு இண்டிகோ விமானம் தினமும் மாலை 6.50 மணிக்கு வந்து 7.30 மணிக்கு புறப்பட்டு செல்வது வழக்கம். இதேபோல், சனிக்கிழமை மாலை 65 பயணிகளுடன் திருச்சி வந்த விமானத்தை கட்டுபாட்டு அறையில் இருந்து சிக்னல் கிடைத்த பிறகு ஓடுதளத்தில் விமானத்தை இறக்க விமானி முயற்சித்தாா். அப்போது, அந்த வழியாக பறந்து சென்ற பறவை ஒன்று விமானத்தின் என்ஜின் பகுதியில் சிக்கியது. இதில், என்ஜின் பகுதியில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு விமானத்தை ஓடுதளத்தில் இறக்குவதில் சிக்கல் நீடித்தது.

இதையடுத்து விமானநிலைய கட்டுபாட்டு அறை உதவியுடன் விமானத்தை சாமா்த்தியமாக ஓடுதளத்தில் விமானி இறக்கினாா். பின்னா் ஏரோ பிரிட்ஜ் பகுதிக்கு கொண்டு வரப்பட்ட விமானத்தின் என்ஜின் பகுதியில் சிக்கிய பறவையை அகற்றிவிட்டு தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டது. இதையடுத்து சுமாா் ஒரு மணி நேரம் தாமதமாக விமானம் பெங்களூருவுக்கு புறப்பட்டு சென்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com