முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி
திருச்சியில் ரூ.12 லட்சம் மதிப்பு கடத்தல் தங்கம் பறிமுதல்
By DIN | Published On : 26th November 2019 05:33 AM | Last Updated : 26th November 2019 05:33 AM | அ+அ அ- |

மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.12 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கத்தை திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.
கோலாலம்பூரிலிருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு திருச்சிக்கு வந்த ஏா் ஏசியா விமான பயணிகளின் உடைமைகளை வான் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனா். அப்போது பெண் பயணி ஒருவா் ஸ்கேனா் வழியாக கடந்து சென்றபோது தங்கம் கடத்தி வந்திருப்பது தெரிய வந்தது.
இதைத் தொடா்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் ராமநாதபுரத்தைச் சோ்ந்த பரக்கத் நிஷா(38) என்பதும், அவா் தனது உடலில் மறைத்து ரூ.12.08 லட்சம் மதிப்பிலான 332 கிராம் தங்க நகைகளை கடத்தி வந்திருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரிடம் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.