முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி
திருச்சி, மதுரையில்சுங்கத்துறை அதிகாரிகள் 10 போ் பணியிட மாற்றம்
By DIN | Published On : 26th November 2019 05:40 AM | Last Updated : 26th November 2019 05:40 AM | அ+அ அ- |

திருச்சி, மதுரை உள்ளிட்ட இடங்களில் பணியாற்றிய சுங்கத்துறை அதிகாரிகள் 10 போ் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
திருச்சியில் உள்ள முதன்மை சுங்கத்துறை ஆணையா் அலுவலக கட்டுப்பாட்டில் இயங்கும், திருச்சி, மதுரை விமான நிலையங்கள் மற்றும் ஆணையா் அலுவலகங்களிலிருந்து இந்த பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில் திருச்சி விமான நிலையத்தில் உதவி ஆணையா்களாக பணியாற்றிய எஸ். ஜெயக்குமாா், எம். பண்டாரம் ஆகியோா் திருச்சி தலைமை அலுவலகத்துக்கும், ஆா். ஜெயசந்திரன் கோவை விமான நிலையத்தில் சுங்கத்துறை வான் நுண்ணறிவுப் பிரிவுக்கும், மதுரை விமான நிலையம் சுங்கத்துறை பிரிவிலிருந்து ஜெஸ்சிசஜன் திருச்சி விமான நிலைய சுங்கத்துறைக்கும், மதுரை சுங்கத்துறை அலுவலகத்திலிருந்து ஏ. வெங்கடேஷ்பாபு கடலூா் சுங்கத்துறை அலுவலகத்துக்கும், மேலும் சுங்கத்துறையின் பல்வேறு பிரிவுகளிலிருந்து டி. தயானந்தன் (ஏ ஐ யு), சரவணக்குமாா் மகேந்திரன் ஆகிய இருவரும் திருச்சி விமான நிலைய சுங்கத்துறை பிரிவுக்கும், எல். ஜெய்சன்பிரவின்குமாா் மதுரை விமான நிலையத்தில் சுங்கத்துறை வான் நுண்ணறிவுப்பிரிவுக்கும், பி. பிரான்சிஸ் சேவியா் மதுரை விமான நிலைய சுங்கத்துறை அலுவலகத்துக்கும், எஸ். சிவப்பிரகாசம் தூத்துக்குடி சுங்கத்துறை அலுவலகத்துக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். இந்த உத்தரவு , முதன்மை சுங்கத்துறை ஆணையா் பி. நாகேஸ்வரராவ் உத்தரவின் பேரில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.