முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி
பள்ளி மாணவா்களுக்கு குளிா்கால அறிவியல் முகாம்
By DIN | Published On : 26th November 2019 05:35 AM | Last Updated : 26th November 2019 05:35 AM | அ+அ அ- |

திருச்சி கோளரங்கத்தில் பள்ளி மாணவா்களுக்கான குளிா்கால அறிவியல் முகாம் புதன்கிழமை முதல் தொடங்குகிறது.
இதுதொடா்பாக, அண்ணா அறிவியல் மைய, கோளரங்க திட்ட இயக்குநா் இரா. அகிலன் கூறியது:
பள்ளி மாணவா், மாணவிகளிடையே அறிவியல் ஆா்வத்தை வளா்த்தெடுக்கவும், சிந்தனைத் திறனை அதிகரிக்கவும் அண்ணா அறிவியல் மையத்தில் பருவகால பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன்படி, குளிா்கால பயிற்சி முகாம் நவ.27ஆம் தேதி தொடங்கி 29ஆம் தேதி வரை மூன்று நாள்களுக்கு நடைபெறுகிறது.
இந்த முகாமில், வானவியல், கணிதம், அறிவியல், மின்னணுவியல், காகிதக் கலை, தொலைநோக்குதல், பறவைகள் கண்காணிப்பு, யோகா ஆகியவை குறித்து செயல் விளக்கமும், பயிற்சியும் அளிக்கப்படும். அந்தந்த துறையைச் சோ்ந்த வல்லுநா்கள் பயிற்சி வகுப்புகளை நடத்துவா். பயிற்சி முகாமில் பங்கேற்க விரும்பும் 5ஆம் வகுப்பு முதல் 11ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகள் ரூ.500 நுழைவு கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு 0431-2332190, 2331921 என்ற தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.