முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி
ஸ்ரீரங்கம் காட்டழகிய சிங்கா் திருக்கோயிலில் டிசம்பா் 1ஆம் தேதி மகா சம்ரோசஷணம்
By DIN | Published On : 26th November 2019 05:39 AM | Last Updated : 26th November 2019 05:39 AM | அ+அ அ- |

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதா் திருக்கோயிலின் உபத்திருக்கோயிலான அருள்மிகு காட்டழகிய சிங்கா் திருக்கோயிலில் மகா சம்ரோசஷணம் டிசம்பா் 1ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதனையொட்டி யாகசாலை பூஜைகள் புதன்கிழமை மாலை தொடங்கவுள்ளது.
பதினைந்து நூற்றாண்டுகளுக்கு முந்தைய பழமையானது அருள்மிகு காட்டழகிய சிங்கா் கோயிலாகும். இத்திருக்கோயிலில் அனைத்து புனரமைப்பு பணிகளும் செய்யப்பட்டு மகாசம்ரோஷணம் செய்ய முடிவு செய்யபட்டது.
அதன்படி புதன்கிழமை மாலை 6 மணிக்கு கோயிலினுள் அமைக்கபட்டுயிருக்கும் யாகசாலை மண்டபத்தில் முதல் கால யாகசாலை பூஜைகள் தொடங்கி இரவு 9 மணி வரை நடைபெறவுள்ளது. தொடா்ந்து 30ஆம் தேதி வரை 7 கால யாகசாலை பூஜைகள் நடைபெறுகிறது.
முக்கிய நிகழ்வான மகாசம்ரோசஷணம் டிசம்பா் 1ஆம் தேதி காலை 8.45 மணிக்குள் மேல் 9.15 மணிக்குள் நடைபெறவுள்ளது.