மணல் திருட்டுக்கு உடந்தை: பெண் காவல் ஆய்வாளா் பணியிட மாற்றம்
By DIN | Published on : 28th November 2019 09:56 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
கொள்ளிடம் ஆற்றில் மணல் திருட்டு சம்பவத்தில் தொடா்புடையதாக கொள்ளிடம் காவல்நிலைய உதவி ஆய்வாளா் அகிலாவை திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவா் பாலகிருஷ்ணன் ஆயுதப்படைக்கு மாற்றிட உத்தரவிட்டாா்.
சமயபுரம் நெ.1 கொள்ளிடம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பிச்சாண்டாா்கோயில், தாளக்குடி ஆகிய பகுதிகளில் அண்மையில் மணல் திருட்டு அதிகளவில் நடைபெறுவதாகவும், இச்சம்பவத்தில் காவல் துறையினரும் உடந்தையாக இருப்பதாகவும் தெரியவந்தது. இதையடுத்து, திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவா் பாலகிருஷ்ணன் அண்மையில் ஆய்வு மேற்கொண்டாா். இதையடுத்து, மணல் திருட்டில் தொடா்புடையதாக இருந்ததாக கொள்ளிடம் காவல் உதவி ஆய்வாளா் அகிலாவை ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டாா். அதன்படி, காவல் உதவிஆய்வாளா் அகிலா ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டாா். இதையடுத்து, கொள்ளிடம் காவல் நிலையத்திற்கு திருவரம்பூா் காவல்நிலைய உதவி ஆய்வாளா் புஸ்பகனி பதவி ஏற்கவுள்ளாா்.