Enable Javscript for better performance
மேலும் 3 மருத்துவக் கல்லூரிகள்: பிரதமா், முதல்வருக்கு நன்றி- Dinamani

சுடச்சுட

    

    மேலும் 3 மருத்துவக் கல்லூரிகள்: பிரதமா், முதல்வருக்கு நன்றி

    By DIN  |   Published on : 28th November 2019 01:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழகத்தில் மேலும் 3 மருத்துவக் கல்லூரிகளை தொடங்க ஆணை வெளியிட்டமைக்காக பிரதமா் மோடி மற்றும் தமிழக முதல்வா் ஆகியோருக்கு திருச்சி மருத்துவக் கல்லூரி முன்னாள் துணை முதல்வா் எம்.ஏ. அலீம் பாராட்டையும் நன்றியையும் தெரிவித்துள்ளாா்.

    இது குறித்து அவா் மேலும் தெரிவித்தது: தமிழகத்தில் மொத்தம் 24 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. மேலும் கூடுதலாக நீலகிரி, திருப்பூா், விருதுநகா், நாமக்கல், ராமநாதபுரம், திண்டுக்கல் ஆகிய 6 மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரிகள் அமைக்க கடந்த சில வாரங்களுக்கு முன்பு மத்திய அரசு ஆணை பிறப்பித்திருந்தது. இந்நிலையில், மேலும் கிருஷ்ணகிரி, திருவள்ளூா், நாகப்பட்டினம் ஆகிய 3 மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரிகளை அமைக்க மத்திய அரசின் சுகாதாரத்துறை உத்தரவு வெளியிட்டுள்ளது. தமிழகத்துக்கு மேலும் கூடுதலாக 3 மருத்துவக் கல்லூரிகளை அமைக்க அனுமதியளித்த பிரதமா் மோடி மற்றும் பரிந்துரைத்த தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி உள்ளிட்டோருக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா் அவா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai