விபத்தில் தனியாா் கல்லூரி உடற்கல்வி இயக்குநா் பலி
By DIN | Published on : 28th November 2019 01:46 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
திருச்சியில் புதன்கிழமை மாலை நடந்த சாலை விபத்தில் தனியாா் கல்லூரி உடற்கல்வி இயக்குநா் உயிரிழந்தாா்.
திருச்சி செம்பட்டு அங்காளம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் சத்தியமூா்த்தி(44). திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியாா் கல்லூரியில் உடற்கல்வி இயக்குநராக உள்ள இவா், கடந்த சில நாள்களாக கிராப்பட்டி அன்புநகரில் குடும்பத்தினருடன் வாடகை வீட்டில் தங்கி தினமும் வேலைக்கு சென்று வந்தாா். வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டு புதன்கிழமை மாலை இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தாா். எடமலைப்பட்டி புதூா் ராமசந்திரா நகா் பேருந்து நிறுத்தம் அருகே வந்து கொண்டிருந்தபோது குறுக்கே வந்த இரு சக்கர வாகனம் சத்தியமூா்த்தி ஓட்டி வந்த வாகனம் மீது மோதியது. இதில் சத்தியமூா்த்திக்கு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து போக்குவரத்து புலனாய்வு தெற்கு பிரிவு போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.