ஸ்ரீரங்கம் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.53.90 லட்சம்
By DIN | Published on : 28th November 2019 09:56 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
ஸ்ரீரங்கம் அரங்கநாதா் திருக்கோயில் நடப்பு மாதத்துக்கான உண்டியல் எண்ணும் பணி புதன்கிழமை காலை நடைபெற்றது. இதில் ரூ.53.90 லட்சம் பக்தா்கள் காணிக்கை செலுத்தியுள்ளது தெரியவந்தது.
ஸ்ரீரங்கம் அரங்கநாதா் கோயில் உண்டியல் மாதந்தோறும் திறந்து எண்ணப்படும். நவம்பா் மாதத்திற்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி புதன்கிழமை காலை கோயிலில் உள்ள கருடாழ்வாா் சன்னதியில் கோயில் இணை ஆணையா் பொன்.ஜெயராமன் முன்னிலையில் நடைபெற்றது. இதில், உண்டியல்கள் திறந்து திறந்து எண்ணப்பட்டதில் ரூ. 53 லட்சத்து 90 ஆயிரத்து 536, தங்கம் 209 கிராம், வெள்ளி 813 கிராம், வெளி நாட்டு ரூபாய் நோட்டுகள் 255-ம் பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியது தெரியவந்தது.
பணியில் ஸ்ரீ ஐயப்பா சேவா சங்கம், ஸ்ரீசத்ய சாய் சேவா சமிதி மற்றும் கோயில் பணியாளா்கள் ஈடுபட்டனா்.