தமிழ்நாடு அரசு பணியாளா்கள் உண்ணாவிரதம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்கத்தினா் திருச்சியில் புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருச்சியில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு பணியாளா் சங்கத்தின் உண்ணாவிரதப் போராட்டத்தில் பேசுகிறாா் சங்கத்தின் சிறப்புத் தலைவா் கு. பாலசுப்பிரமணியன்.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள திருவள்ளுவா் பேருந்து நிலையம் எதிரே நடைபெற்ற போராட்டத்திற்கு சங்கத்தின் மாநில துணைத்தலைவா் அ.சோனை கருப்பையா தலைமை வகித்தாா். சங்க சிறப்பு தலைவா் கு. பாலசுப்பிரமணியன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினாா்.

போராட்டத்தில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். ஊதியக்குழுவின் முரண்பாடுகளைக் களைய வேண்டும். மக்கள் தொகை மற்றும் வருமானத்தின் அடிப்படையில் ஊராட்சிகளை பேரூராட்சிகளாக தரம் உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதில் மாநிலப் பொருளாளா் ச. சாகுல்அமீது, மாநில தலைவா் சி. பழனிவேலு, மாநிலச் செயலா் பி. முருகானந்தம், சத்துணவு, அங்கன்வாடி, டாஸ்மாக், நியாய விலைக்கடை பணியாளா்கள் என 50-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். நிறைவாக மாநில செயற்குழு உறுப்பினா் பா.ரமேஷ் நன்றியுரையாற்றினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com