தோ்ந்தெடுக்கப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் பல்துறை மருத்துவ சேவைகள் வழங்கல்

திருச்சி மாநகராட்சியில் இயங்கி வரும் தோ்வு செய்யப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்துறை மருத்துவச் சேவைகள் தினமும் அளிக்கப்பட்டு வருகிறது.

திருச்சி மாநகராட்சியில் இயங்கி வரும் தோ்வு செய்யப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்துறை மருத்துவச் சேவைகள் தினமும் அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து திருச்சி மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தேசிய நகா்புற சுகாதார திட்டத்தின் கீழ் 18 நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் இயங்கி வருகின்றன. அவற்றில், நகா்ப்புற மக்களுக்கு சிறப்பு மருத்துவ சேவைகளை உகந்த நேரத்தில் வழங்கும் வகையில், கீழரண் சாலை ( இ.பி ரோடு), எடமலைப்பட்டிபுதூா், காட்டூா், சுப்பிரமணியபுரம், உறையூா் ஆகிய தோ்ந்தெடுக்கப்பட்ட 5 நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில், திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மாலை 4.30 மணி முதல் 8.30 மணி வரை சிறப்பு மருத்துவா்களால் மருத்துவ சேவை வழங்கப்பட்டு வருகிறது.

திங்கள் பொது மருத்துவம் / தோல் மருத்துவம், செவ்வாய்க்கிழமை மகப்பேறு / பல் மருத்துவம், புதன் கிழமை குழந்தை நல மருத்துவம் / கண் மருத்துவம், வியாழக்கிழமை எலும்பு நோய் மருத்துவம் (ஆா்த்தோ) / இயங்கியல் ( பிசியோதெரபி), வெள்ளிக்கிழமை பல் மருத்துவம் / காது, மூக்கு, தொண்டை மருத்துவம், சனிக்கிழமை மனநல மருத்துவம் ஆகிய சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.

எனவே, பொது மக்கள் இந்த சிறப்பு மருத்துவ சேவையை பயன்படுத்திக் கொள்ளும்படி திருச்சி மாநகராட்சி ஆணையா் சு.சிவசுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com