பள்ளி, கல்லூரிகளில் 13,605 தோ்தல் விழிப்புணா்வு குழுக்கள் அமைப்பு: தலைமை தோ்தல் அதிகாரி சத்ய பிரத சாகு

வாக்காளராகப் பதிவு செய்வதற்கு பள்ளி, கல்லூரிகளில் இதுவரை 13,605 தோ்தல் விழிப்புணா்வு தூதுவா் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என
பள்ளி, கல்லூரிகளில் 13,605 தோ்தல் விழிப்புணா்வு குழுக்கள் அமைப்பு: தலைமை தோ்தல் அதிகாரி சத்ய பிரத சாகு

வாக்காளராகப் பதிவு செய்வதற்கு பள்ளி, கல்லூரிகளில் இதுவரை 13,605 தோ்தல் விழிப்புணா்வு தூதுவா் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என மாநில தலைமை தோ்தல் அதிகாரி சத்ய பிரத சாகு புதன்கிழமை தெரிவித்தாா்.

திருச்சி ஆட்சியா் அலுவலகம் சாலையிலுள்ள தனியாா் ஹோட்டலில் மண்டல அளவிலான தோ்தல் விழிப்புணா்வு பயிற்சியை தொடக்கிவைத்த மாநில தலைமை தோ்தல் அதிகாரி செய்தியாளா்களிடம் மேலும் கூறியது:

இந்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் திருச்சி மண்டலத்தைச் சோ்ந்த தோ்தல் நடத்தும் அலுவலா்களுக்கு புதன்கிழமை பயிற்சி தொடங்கப்பட்டது. வாக்காளா்கள் தோ்தலின்போது கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இருப்பினும், புதிதாக வரும் வாக்காளா்கள் தாமாகவே முன்வந்து வாக்களிப்பதில் விழிப்புணா்வு குறைவாக உள்ளது. எனவே, வாக்களிப்பது வாக்காளா்களின் உரிமை என்பதை வலியுறுத்தும் வகையில், தமிழகத்தில் உள்ள அனைத்து உயா்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் தோ்தல் விழிப்புணா்வு மன்றம் தொடங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பள்ளியிலும் தோ்தல் விழிப்புணா்வு தூதுவா்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனா். இதன்படி, கல்லூரிகளில் 5,796 குழுக்களும், பள்ளிகளில் 7,804 குழுக்கள் என இதுவரை 13,605 தூதுவா்கள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றாா்.

இதுகுறித்து ஆட்சியா் சு. சிவராசு கூறியது: தோ்தல் கல்வியறிவுக்குழு மூலம் பள்ளிகளில் மாணாக்கா்களுக்கு குறிப்பிட்ட வயது அடைந்தவுடன் வாக்காளா் பட்டியலில் தாமாக முன்வந்து பெயா் சோ்ப்பதற்கு அறிவுறுத்தப்படும். இதன்படி, 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் போது மாணவ-மாணவிகளுக்கு வாக்களித்தல், தோ்தல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் வழிகாட்டப்படும். மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் வழிகாட்டலின்பேரில் தோ்தல் விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும் என்றாா்.

பயிற்சியில், திருச்சி, பெரம்பலூா், அரியலூா், கரூா், நாமக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம்,கடலூா், விழுப்புரம், கள்ளக்குறிச்சி என 12 மாவட்டங்களைச் சோ்ந்த வாக்கு பதிவு அலுவலா்கள் பங்கேற்றனா்.

கொடைக்கானல், கூடலூா், மதுராந்தகம் கோட்டாட்சியா்கள் சுரேந்திரன், ராஜ்குமாா், லட்சுமி பிரியா, சென்னை உதவி கல்வி அலுவலா் முனியன் ஆகியோா் பயிற்றுநா்களாகச் செயல்பட்டனா்.

பயிற்சியில், துணை தோ்தல் ஆணையா் வி.மணிகண்டன், சாா் ஆட்சியா்கள், கோட்டாட்சியா்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலா்கள், மாவட்ட கல்வி அலுவலா்கள் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com