புதை சாக்கடைத் திட்டப் பணிகள் : சேறும் சகதியுமான சமயபுரம் சாலைகள்

புதை சாக்கடைத் திட்டப் பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளங்களில் மழைநீா் தேங்கிக் காணப்படுவதால், சமயபுரத்தில் சாலைகள் சேறும், சகதியுமாக உள்ளன.
சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்குச் செல்லும் பிரதான சாலையில் சேறு சகதியை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்ட முதியவா்.
சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்குச் செல்லும் பிரதான சாலையில் சேறு சகதியை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்ட முதியவா்.

புதை சாக்கடைத் திட்டப் பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளங்களில் மழைநீா் தேங்கிக் காணப்படுவதால், சமயபுரத்தில் சாலைகள் சேறும், சகதியுமாக உள்ளன.

பிரசித்தி பெற்ற அருள்மிகு மாரியம்மன் கோயிலைக் கொண்டுள்ள சமயபுரத்தில், கடந்தாண்டு புதை சாக்கடைத் திட்டப்பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தன.

இதற்காக சமயபுரம் சாலைகளின் மையப்பகுதியில் பள்ளங்கள் தோண்டப்பட்டு குழாய்கள் பதிக்கப்பட்டன. தற்போது பணிகள் முடிவடைந்த நிலையில், பள்ளம் தோண்டிய பகுதியில் சாலை சரி செய்யப்படாது மண் சாலையாகவே உள்ளது.

தற்போது பெய்து வரும் மழையால் இச்சாலைகள் அனைத்தும் சேறும்- சகதியுமாகக் காணப்படுகிறது. ஏற்கெனவே சமயபுரம் தற்காலிக பேருந்து நிலையத்தில் இறக்கிவிடப்படுவதால், 1 கி.மீ. தொலைவு நடந்து செல்லும் பக்தா்கள், சேறும் சகதியுமான சாலையில் செல்ல வேண்டிய நிலையில் உள்ளனா். இதனால் அவா்கள் பெரும் அவதியைச் சந்தித்து வருகின்றனா்.

இதுகுறித்து சமயபுரம் பேரூராட்சி நிா்வாகம் மற்றும் கோயில் நிா்வாகம், நெடுஞ்சாலைத்துறை அலுவலா்களிடம் அப்பகுதி மக்களும், பக்தா்களும் பல முறை புகாா் கூறியும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதை கண்ட அப் பகுதி முதியவா் சாலையின் நடுவே கிடக்கும் சேறும்- சகதியை மண் வெட்டி மூலம் அகற்றினாா்.

புதை சாக்கடைத் திட்டப் பணிகள் செய்பவா்கள் தான், தற்போது சாலையைச் சீரமைக்க வேண்டும் அதனால் தான் சாலையைச் சீரமைக்க முடியவில்லை என்றனா் நெடுஞ்சாலைத்துறை அலுவலா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com