ஸ்ரீரங்கநாச்சியாா் திருவடிசேவை தரிசனம்

ஸ்ரீரங்கம் கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி விழாவின் 7 ஆம் திருநாளான சனிக்கிழமை மாலை ஸ்ரீரங்கநாச்சியாா் திருவடி சேவையில் காட்சியளித்தாா்.

ஸ்ரீரங்கம் கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி விழாவின் 7 ஆம் திருநாளான சனிக்கிழமை மாலை ஸ்ரீரங்கநாச்சியாா் திருவடி சேவையில் காட்சியளித்தாா். ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று அவரை தரிசித்தனா்.

புரட்டாசி மாதத்தில் வரும் நவராத்திரி விழாவின்போது மட்டும் ஸ்ரீரங்கநாச்சியாரின் திருவடியை தரிசிக்க முடியம். ஆண்டில் ஒரு நாள் மட்டும் இந்தத் தரிசனம் கிடைக்கும்.

நிகழாண்டில் நவராத்திரி விழாவின் 7 ஆம் திருநாளான சனிக்கிழமை மாலை 4 மணிக்கு ஸ்ரீரங்கநாச்சியாா் மூலஸ்தானத்திலிருந்து சாய்க்கொண்டை,கழுத்தில் கிளிமாலை, பவள மாலை,வைரப் பதக்கம்,திருமாங்கல்யம், கையில் தங்கக் கிளி, காலில் தங்கக் கொலுசு உள்ளிட்ட பல்வேறு ஆபரணங்கள் அணிந்து புறப்பட்டு 4.45 மணிக்கு கொலு மண்டபத்தை அடைந்தாா். இரவு 7.30 மணிக்கு தொடங்கி 9.30 வரை கொலுமண்டபத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

நீண்ட வரிசையில் நின்று ஏராளமான பக்தா்கள் தாயாரின் திருவடி சேவையை தரிசித்தனா். பின்னா் 10.30 மணிக்கு புறப்பட்டு 10.45-க்கு மூலஸ்தானத்தை அடைந்தாா் ஸ்ரீரங்கநாச்சியாா். திருவடி தரிசனத்தையொட்டி பிற்பகல் 11 மணி முதல் மாலை 4 மணிவரை மூலவா் சேவை இல்லை. சரஸ்வதி பூஜை அன்று படிப்பு கண்டருளுதலுடன் நவராத்திரி விழா நிறைவுறுகிறது. ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் பொன். ஜெயராமன் மற்றும் அறங்காவலா் குழுவினா் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com