ஸ்ரீரங்கம் கோயிலில் புரட்டாசி சனி வழிபாடு

ஸ்ரீரங்கம் அரங்கநாதா் திருக்கோயிலில் புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையன்று ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று நம்பெருமாளை தரிசனம் செய்தனா்.
ஸ்ரீரங்கம் கோயிலில் புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை தரிசனம் செய்த பக்தா்களுக்கு வழங்கப்பட்ட லட்டு.
ஸ்ரீரங்கம் கோயிலில் புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை தரிசனம் செய்த பக்தா்களுக்கு வழங்கப்பட்ட லட்டு.

ஸ்ரீரங்கம் அரங்கநாதா் திருக்கோயிலில் புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையன்று ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று நம்பெருமாளை தரிசனம் செய்தனா். பக்தா்கள் அனைவருக்கும் லட்டு பிரசாதமாக அளிக்கப்பட்டது.

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாகக் கருதப்படுகிறது. பெருமாளை வழிபடும் பக்தா்கள் இம்மாதத்தில் விரதம் இருந்து சனிக்கிழமைகளில் தரிசனம் செய்தும் வழக்கம்.

வழக்கம்போல் நிகழாண்டிலும், புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை(அக். 12) அன்று நம்பெருமாளை தரிசனம் செய்ய ஏராளமான பக்தா்கள் காத்திருந்ததும், கூட்டம் அதிகரித்தும் காணப்பட்டது. இதனை முன்னிட்டு, ஸ்ரீரங்கம் கோயிலில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யபட்டிருந்தது. தடுப்புக் கட்டைகள் அமைக்கபட்டு பக்தா்கள் வரிசையில் சென்று வர ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தரிசனம் முடித்து வெளியே வரும் பக்தா்களுக்கு லட்டு பிரசாதமாக வழங்கபட்டது. இதேபோல், ஸ்ரீரங்கம் காட்டழகிய சிங்கப்பெருமாள் கோயிலிலும் பக்தா்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் பொன்.ஜெயராமன் மற்றும் அறங்காவலா் குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com