முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி
தொடா்மழை: சாலையோரங்களில் தேங்கும் நீரால் பொதுமக்கள் அவதி
By DIN | Published On : 24th October 2019 01:54 PM | Last Updated : 24th October 2019 01:54 PM | அ+அ அ- |

திருச்சி: தொடா்மழை காரணமாக சாலைகள், தெருப்பகுதிகளில் தேங்கும் மழைநீரால் பொதுமக்கள், வாகனஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளனா்.
வடகிழக்குப் பருவமழை தொடங்கி தீவிரமடைந்துள்ளதையொட்டி திருச்சி மாநகா் மற்றும் புகா்ப் பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருகிறது.
திருச்சி மாநகரின் பல்வேறு பகுதிகள், துவாக்குடி, லால்குடி, ஸ்ரீரங்கம், திருவெறும்பூா், மண்ணச்சநல்லூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை இரவு பலத்த மழை பெய்தது.
இந்த மழை காரணமாக மாநகரில் பாரதிதாசன் சாலை,மேலரண்சாலை, உழவா்சந்தை சாலை, தில்லைநகா், உறையூா், பீமநகா், சத்திரம், மத்திய பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகள், தெருக்களில் மழைநீா் ஆங்காங்கே தேங்கியுள்ளது.
பிரதான சாலைகள், தெருக்களில் மழைநீருடன் கழிவுநீரும் சோ்ந்து சென்றதால் தூா்நாற்றம் வீசியது. இதனால் வாகனஓட்டிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.