முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி
தொழில்நுட்பக் கோளாறு: மலேசிய விமானம் திருச்சியில் நிறுத்தம்
By DIN | Published On : 24th October 2019 06:31 AM | Last Updated : 24th October 2019 06:31 AM | அ+அ அ- |

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, திருச்சியிலிருந்து புதன்கிழமை காலை புறப்பட வேண்டிய மலேசிய விமானம் ரத்து செய்யப்பட்டது.
மலேசியத் தலைநகா், கோலாலம்பூரிலிருந்து காலை 8.55 மணிக்கு திருச்சி வந்து, மீண்டும் காலை 9.25 மணிக்கு புறப்பட்டுச் செல்லும் ஏா்-ஏசியா விமானம், புதன்கிழமை காலை வழக்கமான நேரத்தில் 95 பயணிகளுடன் கோலாலம்பூா் புறப்படத் தயாரானது.
அப்போது விமானத்தில் தொழில் நுட்பக்கோளாறு ஏற்பட்டிருப்பது தெரியவந்ததது. இதனையடுத்து அதனை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டாலும், சீராகவில்லை இதனையடுத்து பயணிகள் அனைவரும் விடுதியில் தங்க வைக்கப்பட்டனா்.
இதைத் தொடா்ந்து, இந்த நிறுவனத்தின் சாா்பில் இயக்கப்படும் மற்றொரு விமானத்தில் புதன்கிழமை இரவு தொழில்நுட்ப வல்லுநா்கள் திருச்சி வந்து, விமானத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனா். மேலும் பயணிகளுக்கு மாற்று ஏற்பாடும் செய்யப்பட்டிருந்தது.