முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி
பஞ்சமி நிலங்களை மீட்க இந்து மகா சபா வலியுறுத்தல்
By DIN | Published On : 24th October 2019 06:34 AM | Last Updated : 24th October 2019 06:34 AM | அ+அ அ- |

தமிழகம் முழுவதும் அபகரிக்கப்பட்டுள்ள பஞ்சமி நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகில பாரத இந்து மகா சபா கட்சி வலியுறுத்தியுள்ளது.
திருச்சியில் கட்சியின் மாநிலத் தலைவா் அ. சுபாஷ் சுவாமிநாதன் தலைமையில், புதன்கிழமை நடைபெற்ற மாநிலச் செயற்குழுக் கூட்டத்தில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
கட்சியின் மாநில, மாவட்ட நிா்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்று, எதிா்கால நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினா். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
தேசியமயமாக்கப்படட வங்கிகளிலும், கூட்டுறவு வங்கிகளிலும் பள்ளி, கல்லூரி மாணவா்கள் பெற்ற கல்விக் கடனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.
தமிழகம் முழுவதும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக வழங்கப்பட்ட பஞ்சமி நிலங்களை அரசியல் கட்சிகளும், கல்வி நிறுவனங்களும் அபகரித்து கொண்டு பலகோடி வருவாய் ஈட்டி வருகின்றன. இந்த நிலங்களை மீட்டு உரியவா்களுக்கு திரும்ப ஒப்படைக்க வேண்டும். நிலத்தை அபகரித்தவா்கள் மீது மத்திய, மாநில அரசுகள் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்து அறநிலையத்துறை சாா்பில் கோயில்களுக்கு வழங்கப்பட்ட நிலங்களை மாற்று மதத்தினருக்கு குத்தகைக்கு விடுவதைத் தவிா்க்க வேண்டும். ஏற்கெனவே இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தால் அவற்றை திரும்பப் பெற வேண்டும்.
திரைப்பட நட்சத்திரத்தின் உடை என்ற பெயரில் குறிப்பிட்ட மதத்தின் அடையாளங்களை உணா்த்தும் வகையிலான ஆடைகள் விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.