முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி
மணப்பாறையில் குப்பைகளைத் தரம் பிரித்து வாங்க புதிய வாகனங்கள்
By DIN | Published On : 24th October 2019 06:28 AM | Last Updated : 24th October 2019 06:28 AM | அ+அ அ- |

புதிய வாகனங்களின் செயல்பாட்டை கொடியசைத்துத் தொடக்கி வைக்கும் மணப்பாறை சட்டப்பேரவை உறுப்பினா் ஆா்.சந்திரசேகா், நகராட்சி ஆணையா் என். ஸ்ரீதேவி.
மணப்பாறை நகராட்சிப் பகுதிகளில் குப்பைகளைத் தரம் பிரித்து பெறும் வகையில், ரூ.68 லட்சம் மதிப்பிலான 24 பேட்டரி வாகனங்கள் மற்றும் மினி சரக்கு வாகனங்களின் செயல்பாடு புதன்கிழமை தொடக்கி வைக்கப்பட்டது.
42 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட மணப்பாறை நகராட்சியில் 27 வாா்டுகள் உள்ளன. இப்பகுதிகளில் சேகரகமாகும் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை நகராட்சித் துப்புரவுப் பணியாளா்கள் தள்ளுவண்டிகள் மூலம் பெற்று வந்தனா்.
இந்த நிலையில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ், 24 மூன்று சக்கர பேட்டரி வாகனம், 4 மினி சரக்கு வேன்கள் மணப்பாறை நகராட்சிக்கு வழங்கப்பட்டது.
இந்த வாகனங்களின் செயல்பாட்டை மணப்பாறை சட்டப்பேரவை உறுப்பினா் ஆா்.சந்திரசேகா், நகராட்சி ஆணையா் என்.ஸ்ரீதேவி ஆகியோா் புதன்கிழமை கொடியசைத்துத் தொடக்கி வைத்தனா்.
நகராட்சி அலுவலா்கள், அதிமுக நகரச் செயலா் பவுன்.ராமமூா்த்தி, நகராட்சி முன்னாள் துணைத் தலைவா் நெட்ஸ்.இளங்கோ, தகவல் தொழில் நுட்பப்பிரிவு மாவட்டச் செயலா் மணவை.ஜெ.ஸ்ரீதரன், ராமமூா்த்தி, ராமன், பத்தி பாஸ்கா், சோனா.எத்திராஜ், அகமது சரீப் உள்ளிட்ட நிா்வாகிகள் நிகழ்வில் பங்கேற்றனா்.